உள்ளூர் செய்திகள்!
22/10/2025

பைசுஅள்ளி ஊராட்சி மாட்லாம்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை கடந்த சில மாதங்களாக
முறையாகத் திறக்கப்படுவதில்லை. இதனை கண்டறிந்த நமது ஊராட்சி சமூக நலத் தொண்டர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட
அதிகாரிகளிடம் இரண்டு வாரங்களாக பின் தொடர்ந்து நம்முடைய ஊராட்சியில் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும்
இருந்தும் செயல்படாமல் இருப்பது தெரிவிக்கப்பட்டு. மேலும் இதனால் எங்கள் ஊராட்சியில் பொதுமக்கள் குறிப்பாக
வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அவசர மருத்துவ உதவி பெற சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தோம்.
நம்முடைய ஊராட்சி மக்களின் அவல நிலையை கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக சம்பந்தப்பட்ட
மருத்துவர் மற்றும் செவிலியருக்கு தெரிவிக்கப்பட்டு நாளை முதல் இந்த மருத்துவமனை இயங்குமாறு தெரிவிக்கப்பட்டார்.
மேலும் இந்த மருத்துவமனை திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டார்.
நம்முடைய ஊராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் இந்த மருத்துவ வசதியைபயன்படுத்திக் கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மருத்துவ பிரச்சினைக்கு தீர்வு கண்ட நமது சமூக தொண்டர்கள்
G.V குமார், BE - கெங்குச்செட்டிப்பட்டி
B.G பெரியசாமி - பைசுஅள்ளி
K. வசந்த் - குண்டல அள்ளி
G.M சதீஷ், C.Tech - கெங்குச்செட்டிப்பட்டி
G.M வேடி - கெங்குச்செட்டிப்பட்டி
G.K மாரிமுத்து,BE - கெங்குச்செட்டிப்பட்டி
G.N ரவி, Bsc - கெங்குச்செட்டிப்பட்டி
G.M நஞ்சப்பன் - கெங்குச்செட்டிப்பட்டி
22/10/2025

சின்ன மாட்லாம்பட்டி - அரசு ஆரம்பப்பள்ளி - மேற்கூரைகள் பராமரிக்கப்படாமல் ஆபத்தான நிலையில்
உள்ளது. அங்கு கல்வி மாணவர்களின் நிலை? திரு. குமார் மற்றும் அவருடைய சமூக ஆர்வரல்களின் குழு இன்று பார்வையிடப்பட்டது.
பராமரிக்கப்பட முயற்சி எடுப்பதாக திரு. குமார் உறுதியளித்துள்ளார்.
22/10/2025

பைசுஅள்ளி - அரசு ஆரம்பப்பள்ளி - மேற்கூரைகள் பராமரிக்கப்படாமல் ஆபத்தான நிலையில்
உள்ளது. அங்கு கல்வி மாணவர்களின் நிலை? திரு. குமார் மற்றும் அவருடைய சமூக ஆர்வரல்களின் குழு இன்று பார்வையிடப்பட்டது.
பராமரிக்கப்பட முயற்சி எடுப்பதாக திரு. குமார் உறுதியளித்துள்ளார்.
20/10/2025

இடம்: பைசுஅள்ளி பேருந்து நிறுத்தம் - பராமரிப்பு தகவல்கள் எதுவும் செய்யப்படாமல், பாதுகாப்பு இன்றி காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
20/10/2025

பல ஆண்டுகளாக RTI மூலமாகவும், பல்வேறு மனுக்கள் மூலமாக வட்ட, மாவட்ட, மாநில அதிகாரிகளின் வாயிலாக சமுதாயத்தை நாசப்படுத்தும் மக்களை ஒழுங்காக செயல்பட வைக்கும் சமூக ஆர்வலர் திரு. மாதையன், பைசு அள்ளி அவர்களை சந்தித்த தருணம் இன்று. இனிய நாள். அவர் பணி சிறக்க, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் திரு. குமார், பேராசிரியர் பார்த்தசாரதி.
14/10/2021 ... 
தருமபுரி நகரம் தகடூர் முன்னேற்றம் அலுவலகத்தில் ஆயுத பூஜை இன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 வரை சிறப்பாக நடைபெற்றது.
14/10/2021

தருமபுரி நகரம் INCERD அலுவலகத்தில் ஆயுத பூஜை இன்று மதியம் 12.00 மணி முதல் 12.30 வரை சிறப்பாக நடைபெற்றது.
பைசுஅள்ளி கிராமப்பஞ்சாயத்து
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து பைசுஅள்ளி.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, பைசுஅள்ளி கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 643264.
பைசுஅள்ளி கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தின் காரிமங்கலம் வட்டம் அமைந்துள்ளது.
இது துணை மாவட்ட தலைமையகம் பாலக்கோடுவிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைமையகமான தர்மபுரியிலிருந்து 12 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, பைசுஅள்ளி கிராமமும் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.
கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 984.66 ஹெக்டேர் ஆகும்.
பைசுஅள்ளி மொத்த மக்கள் தொகை 8,181. பைசுஅள்ளி கிராமத்தில் சுமார் 1,890 வீடுகள் உள்ளன.
பைசுஅள்ளிக்கு அருகிலுள்ள நகரம் காரிமங்கலம்.
ஆண் மக்கள் தொகை 4,293.
பெண் மக்கள் தொகை 3,888.
பெண் மக்கள் தொகை 47.5%.
கிராம கல்வியறிவு விகிதம் 60.5%, பெண் கல்வியறிவு விகிதம் 24.4%.
உழைக்கும் மக்கள் தொகை 46.4%.
DMK , AIADMK , PMK இந்த பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்.
பஞ்சாயத்துக்கு உட்பட்ட குக்கிராமங்கள்

வார்டு உறுப்பினர்கள்
M. விஜயலட்சுமி
வார்டு 1: சின்ன மாட்லாம்பட்டி
R. மோகனா
வார்டு 3: கெங்குசெட்டிப்பட்டி
M.C. மாதையன்
வார்டு 4: மாட்லாம்பட்டி
G. கணேசன்
வார்டு 5: மாட்லாம்பட்டி
A. கல்யாணி
வார்டு 6: பள்ளத்துக்கொட்டாய்
M.V. கிருஷ்ணன்
வார்டு 7: மாட்லாம்பட்டி
K. குப்புசாமி
வார்டு 8: உத்தண்டிக்கவுண்டனூர்
C. கோபால்
வார்டு 9: குட்டகாட்டான் கொட்டாய்
P. சிவா
வார்டு 10: பைசுஅள்ளி
P. வெண்ணிலா
வார்டு 11: குண்டலஅள்ளி
M. செல்வி
வார்டு 12: குண்டலஅள்ளி
காரிமங்கலம் - கிராமப் பஞ்சாயத்துகள் - 30
(குறிப்பிட்ட பஞ்சாயத்து பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)